தமிழ் சினிமா

பல கெட்டப்; அதிரடி ஆக்சன்: வெளியானது கார்த்தியின் ‘சர்தார்’ பட டீசர்

செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சர்தார் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் உளவாளியாக நடித்துள்ளார் என டீசரை பார்ப்பதன் மூலம் யூகிக்க முடிகிறது. இந்த படம் எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகிறது.

பி.எஸ்.மித்ரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர் பேனரில் எஸ்.லக்‌ஷ்மன் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இதில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷி கண்ணா, ஷங்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு ஆகிய நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ். இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சுமார் 1.40 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்டுள்ளது இந்த டீசர். இந்திய ராணுவ ரகசியங்களை உளவாளி ஒருவர் பார்ப்பதாக டீசர் தொடங்குகிறது. பல்வேறு கெட் அப்புகளில் கார்த்தி கவனம் ஈர்க்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT