தமிழ் சினிமா

சி 3 வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சூர்யா ரசிகர்கள்

ஸ்கிரீனன்

கேரளாவில் 'சி 3' வெளியீட்டு உரிமையை சோப்னம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் ரசிகர் மன்றம் கைப்பற்றி இருக்கிறது.

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சி3'. ஹரி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிசம்பர் 16ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை சோப்னம் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் ரசிகர் மன்றம் கைப்பற்றி இருக்கிறது. இது குறித்து "தென்னிந்தியாவில் முதல் முறையாக, ஒரு படத்தின் வெளியீட்டு உரிமையை ரசிகர் மன்றம் கைப்பற்றி இருக்கிறது" என்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.

'சி 3'யில் தனது பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

SCROLL FOR NEXT