தமிழ் சினிமா

“தேனிக்கார நண்பருக்கு பரமக்குடியானின் வாழ்த்துகள்” - கமல்ஹாசன்

செய்திப்பிரிவு

பாரதிராஜா நலம் பெற்று வீடு திரும்பியதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அண்மையில் உடல்நலக்குறைவால் சென்னை அமைந்தரகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் அவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது நலமுடன் வீடு திரும்பியிருக்கும் பாரதிராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

''நலம் பெற்று வீடு திரும்பிய பாரதிராஜா, அம்மகிழ்ச்சியான செய்தியை இன்று என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டார். மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை.. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன். ஓகே சீ யூ லேட்டர் ஃபார் ஷூர் (Ok see you later for sure, Bye) என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள்'' தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT