தமிழ் சினிமா

“ஐஸ் வாரியம்... அன்பொழுக பழகுகிறார்” - பார்த்திபன் ட்வீட்

செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன் பாகம் 1' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயுடன் தான் எடுத்துகொண்ட புகைப்படங்களை பார்த்திபன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ள கல்கியின் வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன் பாகம்1' செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளனர். பெரிய பழுவேட்டரையரின் காதலியாக நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளார். இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பின்போது தன்னுடனும், சரத்குமாருடனும் இணைந்து ஐஸ்வர்யா ராய் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ''ஐஸ் வாரியம்! கற்றுக் கொள்ள…. காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில். அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயானப் பிறகும், தான் விரும்பும் கலையை தொடர, ஆரோக்கியத்தை+அழகை காத்திட கடும் முயற்சியும்,விடா பயிற்சியும் செய்கிறார். அழகென நான் காண்பது… பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர் வசனங்களை (இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து ஒன் மோர் கேட்கா ஈகோவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும் அன்பொழுக பழகுகிறார்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT