தமிழ் சினிமா

அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா படம் ரிலீஸ்

ஸ்கிரீனன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம், அடுத்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

24 ஏ.எம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியான 'ரெமோ' வசூல் ரீதியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. 'ரெமோ' இறுதிகட்ட பணிகளின் போதே, மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தின் பூஜை நடைபெற்றது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகிணி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

'ரெமோ' வெளியானதைத் தொடர்ந்து, மோகன் ராஜா படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி நிலவியது. நவம்பர் 11ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்படி நேற்று வேளச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளிலேயே, இப்படம் 2017ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

SCROLL FOR NEXT