தமிழ் சினிமா

மாமன்னன் படத்தில் குணசித்திர வேடம் - வடிவேலு தகவல்

செய்திப்பிரிவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘இப்போது, ‘நாய்சேகர் ரிட்டன்ஸ்’, ‘மாமன்னன்’, ‘சந்திரமுகி 2’ போன்ற படங்களில் நடித்து வருகிறேன். உதயநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தில் குணசித்திர நடிகராக நடித்திருக்கிறேன். தற்போது நடித்துள்ள படங்களில் காமெடி இன்னும் அதிகமாகவே இருக்கும். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெறும் போண்டா மணிக்கு இயன்ற உதவியை செய்வேன்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT