தமிழ் சினிமா

அஜித்தின் ‘ஏகே61’ ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு இன்று வெளியீடு?

செய்திப்பிரிவு

அஜித் நடிக்கும் 'ஏகே61' படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் 'ஏகே61' என அழைக்கப்படுகிறது. அஜித் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவர் தவிர 'சார்பட்டா பரம்பரை' படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடிக்கின்றனர்.

ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்ட முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு க்ரைம் - த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என தகவல்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெறவுள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில், இன்று மாலை 6:30 மணி அளவில் 'ஏகே61' படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல படத்தின் தலைப்பு 'துணிவு' அல்லது 'துணிவே துணை' இரண்டில் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT