தெலுங்கில், ‘உப்பென்னா’ படம் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. தொடர்ந்து 'ஷ்யாம் சிங்கா ராய்', 'பங்கர்ராஜூ' ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். லிங்குசாமி இயக்கிய ’தி வாரியர்’ படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து பாலா இயக்கும் ’வணங்கான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நாக சைதன்யா ஜோடியாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி, சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது விஜய், சூர்யா, மகேஷ்பாபு பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. சூர்யா பற்றி கூறும்போது, நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் மரியாதைக்குரியவர் அவர்தான் என்றார். நடிகர் விஜய், ஊக்கமளிக்கும் சூப்பர் ஸ்டார் என்றும் மகேஷ்பாபு நிஜத்திலும் சினிமாவிலும் சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார்.