தமிழ் சினிமா

கையில் துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் ராமராஜன் - 'சாமானியன்' டீசர் வெளியீடு

செய்திப்பிரிவு

நடிகர் ராமராஜன் நடிக்கும் 'சாமானியன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் ராமராஜன், நீண்ட இடைவெளிக்குப்பின் கடந்த 2012-ம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்தார். அதையடுத்து 10 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் நாயகனாக வருகிறார். அவரது இந்த படத்துக்கு ‘சாமானியன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை ராஹேஷ் இயக்குகிறார். ராமராஜனுடன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அச்சு ராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்திற்கு அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி?

எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவியின் வித்தியாசமான கெட்டப்புடன் டீசர் தொடங்குகிறது. அவர்களுக்கான இன்ட்ரோக்களும் ரசிக்க வைக்கின்றன. 2 நிமிடத்துக்குள்ளான டீசரில், 'சேகுவேரா', 'பிரபாகரன்' உள்ளிட்டோரின் புத்தகங்கள் மூலம் அரசியல் குறியீடுகளும் காட்டப்படுகின்றன. படத்தின் டீசர் ஜாலியாக தொடங்கினாலும், அரசியல் குறியீடுகளுடன், அழுத்தமான மெசேஜை படம் உள்ளடக்கியுள்ளது என்பதை இது உணர்த்துகிறது. இறுதியில் தேநீர் குவளையுடன் வரும் ராமராஜனின் இன்ட்ரோ காட்சி மிரட்டுகிறது. ஆனால், அவருக்கான குரல் மட்டும் துருத்தி நிற்கிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டீசர் வீடியோ;

SCROLL FOR NEXT