சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.50.56 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகன் கதையை அடிப்படையாக கொண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. சித்திகி இத்னானி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஐசரி கணேசன் தயாரித்துள்ள படத்தில் ராதிகா சரத்குமார், மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
படம் முதல் நாள் ரூ.10.86 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக திரை வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.50.56 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.30 கோடியில் உருவானதாக கூறப்படும் இப்படம் நான்கு நாட்களில் பட்ஜெட்டைத் தாண்டிய வசூலை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.