'சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட என் புகைப்படங்கள் நிர்வாணமாக இருப்பது போல் மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளன” என்று என ரன்வீர் சிங் தனது வாக்குமூலத்தில் கூறியதாக மும்பை செம்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய ஆடையற்ற புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். பாப் கலாசாரத்தின் அடையாளமும் நடிகருமான பர்ட் ரெனால்ட்ஸுக்கு இந்தப் புகைப்படங்களை சமர்ப்பிப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்தார். ரன்வீர் சிங்கின் இந்தப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும், மறுபுறம் சர்ச்சையையும் விவாதங்களையும் கிளப்பியது. அப்போது பேசிய அவர், ’நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக இருக்க தயங்க மாட்டேன். ஆனால், என் முன்னால் இருப்பவர்கள் அசெளகரியம் அடைகிறார்கள் என்பது தான் உண்மை’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டது தொடர்பாக என்ஜிஓ சார்பில் ரன்வீர் சிங் மீது புகாரளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இது போன்ற நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்ததற்காக நடிகர் ரன்வீர் சிங் காவல் நிலையத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் கொடுக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ஏற்று செம்பூர் காவல் நிலையத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இதுபோல நிர்வாண புகைப்படங்கள் எடுத்ததன் நோக்கம் என்ன என்பது குறித்து அவரிடம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது காவல் துறையினரிடம் 'எனது நிர்வாண புகைப்படங்கள் எனக்கு இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என தெரியாது' என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியான விவகாரத்தில், தனது போட்டோ மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளதாக ரன்வீர் சிங் அளித்துள்ளார். சமூக வலைதளங்கள் பரவலாக பகிரப்பட்ட தனது புகைப்படங்கள் நிர்வாணமாக இருப்பது போல் மாஃர்பிங் செய்யப்பட்டுள்ளதாக ரன்வீர் சிங் கூறியதாக செம்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.