கௌதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனி 
தமிழ் சினிமா

ராம் பொத்தினேனியுடன் இணையும் கௌதம் வாசுதேவ் மேனன்

செய்திப்பிரிவு

தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியுடன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் புதிய படம் ஒன்றில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனன் - சிம்பு காம்போவில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான, ஆர்வமூட்டும் கதைக்களமாகவும் இது இருக்கும் என்பதையும் அவர் கூறிய நிலையில், சமீபமாக, ராம் பொத்தினேனியும் வழக்கமான மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வருகிறார். இந்தச் சூழலில், கெளதம் மேனன் – ராம் பொத்தினேனி கூட்டணி வித்தியாசமான கதைக்களத்துடன் இணையும் எனத் தெரிகிறது. இதனிடையே ராம் பொத்தினேனி அடுத்து நடிக்க உள்ள 'போயா பட்டி ராபோ' (BoyapatiRapo) படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் - ராம் பொத்தினேனியுடன் இணையலாம் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT