தமிழ் சினிமா

சன்னி லியோனுக்கு தமிழில் பேசப் பயிற்சி - இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

வா மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம், 'ஓ மை கோஸ்ட்'. சன்னி லியோன் நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, சதீஷ், ரமேஷ் திலக், ரவிமரியா, தர்ஷா குப்தா உட்பட பலர் நடித்துள்ளனர். டி.வீரசக்தி, கே.சசிகுமார் தயாரித்துள்ளனர்.

‘சிந்தனை செய்’ ஆர்.யுவன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘‘வரலாற்றுப் பின்னணியில் உருவான திகில் படம் இது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில், மாயசேனா என்ற மகாராணியாக, சன்னி லியோன் நடித்திருக்கிறார். அவருக்காக மும்பையில் படப்பிடிப்பை நடத்தினோம். 'தமிழ் வசனங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தேன். யோகிபாபு, பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருக்கிறார். படத்தில் காமெடி காட்சிகள் அதிகம் இருக்கும். டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT