இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடிக்கும் படம், 'தமிழ்க்குடிமகன்’. லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், துருவா, ஸ்ரீ பிரியங்கா, தீப்ஷிகா, வேல ராமமூர்த்தி, ரவிமரியா, மு.ராமசாமி, அருள் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சாம் சி எஸ் இசை அமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறும்போது, இது ஒரு மனிதனின் குடியுரிமையை பற்றிய படம். தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தும் சமுதாய சமநிலை குறித்தும் இந்தப்படம் பேசும். ஆக்கப்பூர்வமான விவாதங்களையும் உருவாக்கும். இந்தக் கதைக்கு சேரன் நடிப்பு பெரும்பலம். மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், மலையாள நடிகர் லால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது’’ என்றார்.