'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் இடம்பெறும் சிம்புவின் 'அஸ்வின் தாத்தா' கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, மகத், வி.டி.வி.கணேஷ், விஜயகுமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்து வருகிறார்.
மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இறுதி கதாபாத்திரம் என்ன என்பதை சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு. இதற்காக 18 கிலோ உடல் எடையைக் குறைத்து நடிக்கவிருக்கிறார்.
மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தின் லுக் மற்றும் டீஸரை வெளியிட்டதைத் தொடர்ந்து, தற்போது 'அஸ்வின் தாத்தா' கதாபாத்திரத்தில் சிம்புவின் லுக்கை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. விரைவில் டீஸரையும் வெளியிட இருக்கிறது படக்குழு.