ஜெயமோகன் 
தமிழ் சினிமா

சினிமாவாகிறது ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதை

செய்திப்பிரிவு

ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ என்ற சிறுகதை சினிமாவாகிறது. இதை, ரஃபீக் இஸ்மாயில் இயக்குகிறார். டர்மெரிக் மீடியா மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஆஹா தமிழ் இணைந்து தயாரிக்கிறது.

படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். தயாரிப்பாளர் டர்மெரிக் மீடியா அனிதா மகேந்திரன் கூறும்போது, “ஆஹா தமிழ் தளத்துடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம்.

தரமான கதையை, வெற்றிகரமான திரைப்படமாக மாற்ற முடியுமென்பதில் சமரசமற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்தப் படமும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அமையும்” என்றார்.

SCROLL FOR NEXT