நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மனோரமா, பூரண நலமடைந்து செவ்வாய் கிழமை (ஏப்ரல் 8) வீடு திரும்பியுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் 1000 படங்களுக்கு மேலாக நடித்தவர் நடிகை மனோரமா. ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா நடித்த 'சிங்கம் 2' படமே இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்தது.
மார்ச் 30ம் தேதி அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மனோரமாவிற்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் பூரண நலம் அடைந்தவுடன், செவ்வாய்கிழமை (ஏப்ரல் 8) மாலை வீடு திரும்பினார். வீட்டில் சில வாரங்கள் ஒய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.