ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் படத்துக்கு ‘சொப்பன சுந்தரி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
வெளிநாடுகளில் இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்யும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் ‘சொப்பன சுந்தரி’ படத்தை தயாரித்துள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.
‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இதில் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உட்பட பலர் நடித்துள்ளனர்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசை அமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.