தமிழ் சினிமா

பார்த்திபன் இயக்கத்தில் கெளரவ தோற்றத்தில் சிம்ரன்

ஐஏஎன்எஸ்

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்ரன்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சாந்தனு, பார்வதி நாயர், பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார் சிம்ரன். கெளரவ வேடம் குறித்து "இப்படத்தில் நடிப்பது உற்சாகமாக இருக்கிறது. சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் வழக்கமாக நீங்கள் பார்க்கும் கதாபாத்திரமாக இருக்காது. இப்போதைக்கு என் பாத்திர படைப்புக் குறித்து வேறு எதுவும் கூற இயலாது" என்று தெரிவித்துள்ளார் சிம்ரன்.

கடந்த 2 ஆண்டுகளில் 'ஆஹா கல்யாணம்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' மற்றும் 'கரையோரம்' ஆகிய படங்களில் மட்டுமே கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார் சிம்ரன்.

"எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் ஒப்புக் கொள்கிறேன். யாரும் என்னை ஒரு வேடத்தில் நடிக்க வற்புறுத்த முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார் சிம்ரன்.

SCROLL FOR NEXT