தமிழ் சினிமா

தாய் வீட்டுக்கு வரும் உணர்வு - நடிகை அமலா நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ஷர்வானந்த், ரிது வர்மா, ரமேஷ் திலக், நாசர், சதீஷ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கணம்’. ஸ்ரீகார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கில் தயாரித்துள்ளது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை அமலா கூறும்போது, “தமிழ் சினிமாவுக்கு, 30 வருடங்களுக்குப் பிறகு அம்மாவாக வந்திருக்கிறேன். தமிழில் நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி சென்னைக்கு வருவேன். அப்போது என் தாய் வீட்டுக்கு வரும் உணர்வு இருக்கும். அதை மறக்க முடியாது. ‘கணம்’ படத்தில் ஷர்வானந்த் என் மகனாக நடித்துள்ளார். எங்கிருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், இந்த படம் அனைவரையும் இணைக்கும். உங்களைச் சிரிக்க வைக்கும் அர்த்தமுள்ள படம்” என்றார். வரும் 9-ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

SCROLL FOR NEXT