தமிழ் சினிமா

'காசேதான் கடவுளடா' ரீமேக்: ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் 'காசேதான் கடவுளடா'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது மீண்டும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, 'குக் வித் கோமாளி' புகழ், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை கடந்த ஆண்டே ஒரே கட்டமாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முடித்துவிட்டது படக்குழு. தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த மாதம் 7ம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் அறிவிப்புடன் படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. முன்னதாக, படத்தின் ஆடியோ வெளியீடு நேற்றிரவு சன் டிவி மூலமாக நடைபெற்றது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT