கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' கதை தன்னுடையது என்று புகார் தெரிவித்தவர் கோபி. அப்பிரச்சினை இப்போதும் தொடர்ந்து வருகிறது.
தற்போது முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றை தயார் செய்ய, அதில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமானார். ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிவுற்றன.
கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து வரும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.
நயன்தாராவுடன் 'காக்கா முட்டை' சகோதரர்கள் விக்னேஷ் - ரமேஷ், வேல. ராமமூர்த்தி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கிறது.