தமிழ் சினிமா

‘கணம்’ அறிவியல் புனை கதை படம்

செய்திப்பிரிவு

தமிழ், தெலுங்கில் உருவாகி இருக்கும் படம், ‘கணம்’. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.  கார்த்திக் இயக்கியுள்ள இந்தப்படம் மூலம் நடிகை அமலா, 30 வருடத்துக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ளார். ஷர்வானந்த், ரிதுவர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது, ‘‘வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் நமக்கு முக்கியம் என்பதைக் கூறும் படம் இது. அறிவியல் புனைகதையை கொண்ட படம்.

டைம் டிராவல் மற்றும் அம்மா சென்டிமென்ட் இருக்கிறது. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வோம் என்பதைத் தான் இதில் கூறியிருக்கிறோம். மூன்று நண்பர்கள், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றிய கதை என்றாலும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT