'மஞ்சப்பை' ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் 'கடம்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.
'பெங்களூர் நாட்கள்' படத்துக்குப் பிறகு, ராகவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. கேத்ரீன் தெரசா நாயகியாக நடித்து வரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்திற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனது உடலமைப்பை மாற்றியிருக்கிறார் ஆர்யா. பழங்குடியினர் வேடத்தில் ஆர்யா நடித்துவரும் இப்படத்துக்கு 'கடம்பன்' என பெயரிட்டார்கள்.
இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு காட்டிற்குள் நடைபெற்று வந்தது. விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கார்த்தி மற்றும் விஷால் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஆர்யாவின் 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் வெளியிட இருக்கிறது.