தமிழ் சினிமா

விஷாலின் மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு

செய்திப்பிரிவு

நடிகர் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'லத்தி'. இப்படத்தினை தமிழ் நடிகர்களான ரமணா மற்றும் நந்தா இணைந்து 'ராணா புரொடக்ஷன்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இதனை 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை இயக்குகிறார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரிதுவர்மா நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் படத்தின் முதல் பார்வை விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT