ஊழல் புகார் எதிரொலியைத் தொடர்ந்து, சங்கத்தின் கணக்கு விவரங்களை முழுமையாக வெளியிட்டது நடிகர் சங்கம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பதவியேற்றதைத் தொடர்ந்து, நடிகர் சங்க நிலத்தை மீட்கும் பணியில் இறங்கினர். நிலத்தின் மீதிருந்த கடன்களை முழுமையாக அடைத்தவுடன், கட்டிடம் கட்டுவதற்காக ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது.
ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்தக் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சிக்கு உரிமை வழங்கிய வகையில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக வாராகி, நடிகர் சங்க நிர்வாகிகள் மீது பல புகார்களை அளித்துள்ளார். இப்புகார்களுக்கு பதிலடியாக நடிகர் சங்க கணக்கு வழக்குகளை முழுமையாக நடிகர் சங்க இணையத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்தார்கள்.
தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகள் முழுமையாக nadigarsangam.org என்ற இணையத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.