தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இப்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் ஜோடியாக ‘ராம்’படத்தில் நடித்து வருகிறார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகவும் அதற்கானப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாயின. இதுபற்றி, த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனிடம் கேட்டபோது மறுத்தார். ‘இந்து தமிழ் திசை’யிடம் அவர் பேசும்போது, “த்ரிஷாவுக்கு அரசியலில் சேரும் எண்ணமில்லை. இப்படி ஒரு செய்தி எங்கிருந்து வந்தது, எப்படி பரவியது என்று தெரியவில்லை. அதில் துளியளவும் உண்மையில்லை” என்றார்