தமிழ் சினிமா

“தனுஷைக் கண்டு பெருமைப்படுகிறேன்” - அன்புமணி ராமதாஸ்

செய்திப்பிரிவு

''நடிகர் தனுஷைக் கண்டு பெருமைப்படுகிறேன்'' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

'கேப்டன் அமெரிக்கா', 'அவெஞ்சர்ஸ்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ சகோதரர்கள் உருவாக்கிய படம் 'தி கிரே மேன்'. கடந்த மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படத்தில் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக தனுஷும் படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு படம் பார்த்த ரசிகர்களால் மட்டுமல்லாமல், ருஸ்ஸோ சகோதாரர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்த நடிகர் தனுஷை பாராட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி. இது குறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று படம் ‘தி க்ரேமேன்’ பார்த்து மகிழ்ந்தேன். ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் பற்றி பெருமையாக உணர்ந்தேன். நடிகர் தனுஷின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு மேலும் பல விருதுகளை கொண்டு வர எனது வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

'தி கிரே மேன்' படத்தின் அடுத்த பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும், இதில் நடிகர் தனுஷுக்கும் பின்கதையுடன் கூடிய முக்கிய கதாபாத்திரம் இருப்பதையும் படத்தின் இயக்குநர்கள் அண்மையில் உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT