தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திப்பிரிவு

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போன நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. இதில் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ சங்கர், பத்மப்பிரியா, மிருணாளினி ரவி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

இந்நிலையில் 'கோப்ரா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT