சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் 'டிக்:டிக்:டிக்' படப்பிடிப்பு அக்டோபர் 19ம் தேதி துவங்கவிருக்கிறது.
சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் 'மிருதன்'. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது. வசூல் ரீதியில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமானார். இப்படத்தை ஜெபக் தயாரிக்க முன்வந்தார். நாயகியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
'டிக்:டிக்:டிக்' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படம் விண்வெளியை மையப்படுத்தி தயாராகும் முதல் த்ரில்லர் படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 19ம் தேதி முதல் துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதன் படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்கு ஒன்றை அமைத்து பெரும்பாலான காட்சிகள் அதற்குள் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.