கடந்த வெள்ளிக்கிழமை, சிவகார்த்திகேயன் நடிப்பில் 'ரெமோ', விஜய் சேதுபதி நடிப்பில் 'றெக்க', பிரபுதேவா நடிப்பில் 'தேவி' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. வெளியான மூன்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமை அடையச்செய்ததா? மூன்று படங்கள் குறித்த நெட்டிசன்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
செமையா ஒரு நித்திரை கொண்டுட்டு எழும்பி முகத்தை கழுவினதும் முகம் ஒரு ஃப்ரெஷ்ஷா இருக்குமே.. அந்த ஃப்ரெஷ் ஸ்கின் டோன் சிவகார்த்திகேயனுக்கும் வந்திட்டுது. இந்த படத்தில அவ்ளோ மலர்ச்சி... எனக்கென்னமோ ரெமோவை விட எஸ்.கே.தான் அம்புட்டு அழகாருந்தாப்டி..
படத்துல சமூக சிந்தனையா? வாழ்க்கை சுவாரஸ்யமில்லையெண்டு தியேட்டர்க்கு போனா அங்கயும் அழுதுவடியுற தருணம் யாருக்கு வேணும்..?
காதல் மன்னன்+ அவ்வை சண்முகி = ரெமோ
ரெமோ - ஒரு நடிகருக்கும், இயக்குநருக்கும் கண்டிப்பாக சமூக பொறுப்பு வேண்டும். அதை உணரவில்லை என்றால் அவர்களை என்றைக்குமே கலைஞனாக ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் நாட்டை பொறுத்தவரை மக்கள் சினிமாவோடு மிக ஒன்றியவர்கள். அவர்கள் ஒரு சினிமாவை தன் வாழ்வோடு மிக எளிமையாக ஒன்றி பார்க்க கூடியவர்கள். ஆனால் அதில் இவ்ளோ நஞ்சு இருப்பதை பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. இந்த பொண்ணுங்களே இப்டிதான் பசங்களை ஏமாத்திட்டு போயிடுவாங்க என்று நாயகன் சொல்லும்போது திரையரங்கமே கைதட்டி, கூச்சலிடுகிறது. அதைப் பார்க்கும்போது "கை தட்டுபவர்கள் வீட்டிலெல்லாம் பெண்கள் இப்புடி தான் இருக்கிறார்களா?" என்ற கேள்வி மட்டும் எழுகிறது.
"சிவகார்த்திகேயன் கடைசிவரைக்கும் எந்த படத்திலும் வேலைக்கே போகமாட்டாராம். ஒரு வேலவெட்டிக்கும் போகாமல் ஊர சுற்றி வருவாராம்; ஆனா காதல் மட்டும் பொத்துகிட்டு வருமாம்." - ரெமோ.
>Mohan Salem ரெமோ... திருமணம் நிச்சயமான பணக்கார நாயகியை, வேலையில்லாத ஹீரோ காதலிக்கும் பழைய கதை. எந்த லாஜிக்கும் இல்லை. பெண் வேடம் தவிர சிவாவின் பழைய படங்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
* ஒரு பெண் பிள்ளையை பெத்து, அதை உசிரா வளர்த்து, பாதியிலேயே இன்னொருத்தனுக்கு கட்டிக்குடுத்து பிரியற வலிய விடவா ஒரு ரோட் சைடு பர்ஸ்ட் சைட் லவ் இருக்கப்போவுது?
* காதலிக்கற பொண்ணுகிட்ட எவ்ளோ பொய் சொன்னாலும் நம்புவா, அடிமுட்டாளா இருப்பா என்கிற ட்ரெண்ட இன்னும் தமிழ் சினிமா விடல..
* திரைக்கதை எப்டி இருந்தா என்ன, பேசுற வசனங்கள் தெறிக்கிற மாதிரியும், சிரிக்கிற மாதிரியும் இருந்தா படம் ஹிட், ஏனெனில் இது சிவகார்த்திகேயன் பாணி படம். மற்றபடி லாஜிக் இல்லா மேஜிக் என்டர்டெயினர் ரெமோ, சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிடிக்கும். #ரெமோ
'றெக்க' குறித்து...
Sarath Babu
றெக்க - ஊரு விட்டு ஊரு போய், பெண்ணைக் கடத்தும் மாஸ் ஹீரோவின் கதைதான். தமிழ், தெலுங்கு சினிமாவில் இதுக்கு முன்னால் பலமுறை அடித்து துவைத்த கதையும்கூட.
இவ்வருடத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளியான ஆறாவது திரைப்படம் இது. ஒவ்வொரு படத்துக்கு அவர் காட்டும் வித்தியாசங்கள் கலக்கல் ரகம், அவர் படம் வெற்றி அடையும் போது எல்லாம் என் நெருங்கிய நண்பன் வெற்றி அடைந்தது போலதான் தோணும். ஆக்சுவலா இதுபோல ஒரு கதையை செலக்ட் செய்து நடித்ததுக்கு அவர்மேல் கோபம்தான் வர வேண்டும், ஆனால் அவரை ஸ்க்ரீனில் பார்த்தால் வந்த கோபம்கூட பஞ்சு போல இலகுவாய் மனதில் இருந்து காணாமல் போய் விடுகிறது.
'றெக்க' 'மொக்க' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டால், அப்படத்தில் வரும் 'மாலா அக்கா' 'செல்வம் அண்ணன்' என்ற ஒரு கிளைக்கதையில் அழகிய குறும்படம் ஒன்றை நீங்கள் தவறுவதற்கு நான் காரணமாகிவிடுவேன்.
காதல்னா என்னனே தெரியாத வயசுல வர்ற காதல் எவ்வளவு அழகு #கண்ணம்மா #றெக்க
அக்கா, தம்பி உணர்வுகளை அழகாக வடிவமைத்த படம். #றெக்க
விஜய் சேதுபதி கதை விஷயத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இந்தப் படம் ஒருவேளை எக்குத் தப்பாக லாபம் கொடுத்துவிட்டாலும் இதுபோன்ற படத்தில் அவர் இனி நடிக்கவே கூடாது என்பதே ஒரு ரசிகனாக என் வேண்டுகோள்.
BikeLover Skr
அழகான காதலும் அன்பான காதலுமாக இரண்டு றெக்கைகளுடன் வெற்றிப் பறவையாக #றெக்க.
சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய் முதல் ஆண்டவன் கட்டளை வரை தமிழில் எக்ஸ்பரிமண்டல் மூவிக்கு முழு வடிவம் கொடுத்தவர் விஜய் சேதுபதி. இப்படிப்பட்டவரை ஒரு மசாலா படத்தில் பொருத்தி பார்ப்பது சற்று கடினமாகத்தான் இருக்கின்றது.
#றெக்க- விஜய் சேதுபதி பிழையா, இயக்குனர் பிழையா என்பது இறைவனுக்கே வெளிச்சம்...
'தேவி' படம் குறித்து...
பேயே இல்லாத பேய் படம் #தேவி
காதலன் படத்தில் பாத்த மாதிரி செம்ம டான்ஸோடு, எனர்ஜியா ரீ என்ட்ரி கொடுத்திருக்கார் பிரபுதேவா. #தேவி
தேவி- புது விதமான பேய்ப்படம். செம்ம காமெடி
இதுவரைக்கும் பழிவாங்குற பேய்தான் பாத்துருப்பிங்க. இது புதுமாதிரி பேய். பேர், புகழுக்கு ஆசைப்படற பேய். #தேவி
#தேவி படம் நல்லாயிருக்கு. பிரபுதேவா செம்மயா நடிச்சிருக்காரு & டான்ஸ் செம்ம. தமன்னா ஆக்டிங், டான்ஸ் எல்லாமே வேற லெவல்.
பேய் படம் என்றாலும் பேயை எங்கேயும் அசிங்கமாகக் காண்பிக்கவில்லை.. மாறாக ரூபி பேயை நாம் ரசிக்கவே செய்கிறோம்.
சந்திரமுகிய அப்டேட் பண்ணி வச்சிருக்காங்க. #தேவி
சி.பி.செந்தில்குமார் @senthilcp
ரிலீசுக்கு முன் எதிர்பார்ப்பு
1 ரெமோ
2 றெக்க
3 தேவி.
ரிலீசுக்குப்பின் தர வரிசை
1 தேவி
2 றெக்க
3 ரெமோ.