தமிழ் சினிமா

செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ்: முதற்கட்ட பணிகள் துவக்கம்

ஸ்கிரீனன்

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'கோச்சடையான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செளந்தர்யா ரஜினிகாந்த். அப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் கதை விவாதத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தார்.

'கபாலி' படத்தைத் தொடர்ந்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தார் தாணு. அப்படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டன. இப்படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வந்தது. இப்படத்துக்கு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இறுதியில் படத்தின் கதைகளத்திற்கு ஏற்ப தனுஷே நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிவித்தார்கள்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறது படக்குழு. நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் என தீர்மானித்திருக்கிறது படக்குழு.

SCROLL FOR NEXT