லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் 'போகன்' டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'மிருதன்' படத்தைத் தொடர்ந்து 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. 'போகன்' என பெயரிடப்பட்ட இப்படத்தில் அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக இமான் பணியாற்றுகிறார்.
இப்படத்தில் விக்ரம் என்ற பாத்திரத்தில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற பாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளிக்கு வெளிவர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியானாலும், டிசம்பர் வெளியீடு என்று படக்குழு அறிவித்தது. தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையை கணக்கில் கொண்டு டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.