தமிழ் சினிமா

திரையுலக சம்பளத்தில் பாலின பாகுபாடா?- கார்த்தி கருத்து

பிடிஐ

நாயகனுக்கு நிகராக நாயகிகளுக்கான சம்பளம் என்ற விவாதத்தை மார்க்கெட் நிலவரம் மட்டுமே தீர்மானிப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

மேலும், ஆண் - பெண் இருவருக்குமான சம்பள விஷயங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையைத் தவிர மற்ற அனைத்து துறைகளிலுமே வேறுபட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

"திரையுலகத் துறை மட்டுமல்ல. சமூகத்தின் அனைத்து துறைகளிலுமே இப்பிரச்சினை இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் மட்டுமே சம்பளம் ஒன்றாக இருக்கும்.

திரையுலகைப் பொறுத்தவரை அவர்களுடைய மார்க்கெட் நிலவரம் பொறுத்தே சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது" என்று கார்த்தி தெரிவித்தார்.

"பங்குச்சந்தை போன்று சம்பளம் ஏறும் இறங்கும். ஒரு நல்ல எதிர்பார்ப்புள்ள நாயகி அவருடைய மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ப சம்பளம் கேட்கும் போது தயாரிப்பாளர்கள் கொடுக்கிறார்கள்.

ஆகவே, நாம் குறைவான சம்பளம் பெறுவர் என்று கூற முடியாது. ஏனென்றால் திரையுலகைப் பொறுத்தவரை மார்க்கெட் நிலவரம் மட்டுமே சம்பளத்தை தீர்மானிக்கிறது" என்று குறிப்பிட்டார் கார்த்தி.

SCROLL FOR NEXT