தமிழ் சினிமா

ஓடிடி-யில் மேதகு- 2

செய்திப்பிரிவு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான ‘மேதகு’ படம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் இரண்டாம் பாகம், ‘மேதகு-2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிரபாகரனாக, கௌரிசங்கர் நடித்துள்ளார். நாசர் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். இரா.கோ. யோகேந்திரன் இயக்கியுள்ளார். பிரவின் குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 19 ம் தேதி இந்த படம் வெளிநாட்டு தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தியாவில், இந்தப் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்பதால், இதை வெளியிடுவதற்காகவே, தமிழ்ஸ் ஓடிடி என்ற புதிய தளத்தை தொடங்கி வெளியிட உள்ளனர்.

SCROLL FOR NEXT