நடிகர் சங்கக் கட்டிடத்திற்காக ’விருமன்’ இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், கார்த்தி, சூர்யா, இணைந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை, சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கினர். அருகில், துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளனர். 
தமிழ் சினிமா

நடிகர் சங்க கட்டிடம் கட்ட ‘விருமன்’ குழு நிதியுதவி

செய்திப்பிரிவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6 வது செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறங்காவலர் குழுக் கூட்டமும் நடைபெற்றது.

பின்னர், 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது பெறும் நடிகர் சூர்யா, சுதா கொங்கரா, நடிகை அபர்ணா பாலமுரளி , இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் இயக்குநர் சாய் வசந்த், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், துணை நடிகை லட்சுமிப்பிரியா , மடோன் அஸ்வின், ஆவணப்பட இயக்குநர் - ஆர்.வி.ரமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நடிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி முடிவில், ’விருமன்’ படக்குழு நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியது . ’விருமன்’ நாயகன் கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யா, இணைத் தயாரிப்பாளர் 2டி ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன் இணைந்து அதற்கான காசோலையை நடிகர் நாசரிடம் வழங்கினர்.

SCROLL FOR NEXT