சுதா கொங்கரா இயக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா. இதில் அக்ஷய் குமார், ராதிகா மதன் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தை அடுத்து, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கும் படத்தை அவர் இயக்க இருக்கிறார். இந்நிலையில், நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை ஒன்றை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் அதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் தெரிகிறது.
கீர்த்தி சுரேஷ், இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ’மாமன்னன்’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் நானி ஜோடியாக ‘தசரா’, சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’ படங்களில் நடித்து வருகிறார்.