தமிழ் சினிமா

“ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசினேன்” - நடிகர் ரஜினிகாந்த்

செய்திப்பிரிவு

“தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் அரசியல் குறித்து பேசினேன்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதன் விவரம்:

ஆளுநருடனான உங்களது சந்திப்பின் நோக்கம் என்ன?

''இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு. அவரிடம் 30 நிமிடம் பேசினேன். அவர் வட மாநிலங்களில் இருந்தவர். தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். தமிழ் மக்களின் நேர்மை, கடுமையான உழைப்பு அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. முக்கியமாக இங்கிருக்கும் ஆன்மிக உணர்வு அவரை மிகவும் ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.”

ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த கேள்விக்கு 'நோ கமெண்ட்ஸ்' என்றார்.

அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்டதா?

“ஆம், அரசியல் ரீதியாக பேசினோம்.”

மறுபடியும் அரசியலுக்கு வருவதற்கு திட்டம் இருக்கிறதா?

“இல்லை.”

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பேசப்பட்டதா?

“அதைப்பற்றி கூற முடியாது.”

‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

“15 அல்லது 22-ம் தேதி தொடங்கும்.”

SCROLL FOR NEXT