பிரபுதேவா இயக்கவிருக்கும் புதிய படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இருவரும் நாயகர்களாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
2011ம் ஆண்டு தமிழில் விஷாலை நாயகனாக வைத்து 'வெடி' என்ற படத்தை இயக்கினார் பிரபுதேவா. அதனைத் தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களை இயக்கினார். தற்போது மிண்டும் தமிழில் விஜய் இயக்கத்தில் 'தேவி' படத்தில் நாயகனாக நடித்தார்.
இந்நிலையில், மீண்டும் தமிழில் படம் இயக்கவிருக்கிறார் பிரபுதேவா. இப்படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இருவரும் நாயகர்களாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் கதைக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் பிரபுதேவா.
இப்படத்தில் இதர நாயகிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் தீபாவளிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இப்படத்துக்கு 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்று தலைப்பிட்டு இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.