தமிழ் சினிமா

அதர்வா படத்தில் இருந்து ஆனந்தி விலகல்

ஸ்கிரீனன்

ஓடம். இளவரசு இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்திலிருந்து ஆனந்தி விலகியிருக்கிறார்.

அதர்வா, சூரி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, ப்ரணீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம், 2MB மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

சென்னை, ஊட்டி, மதுரை உள்ளிட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பரில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார் ஆனந்தி. கால்ஷீட் தேதிகள் பிரச்சினைக் காரணமாக விலகியிருப்பதாக படக்குழு தெரிவித்தது. மேலும், தற்போது ஆனந்திக்கு பதிலாக அதிதி என்ற புதுமுக நாயகியை நடிக்க வைத்து காட்சிப்படுத்தி வருகிறது 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படக்குழு.

SCROLL FOR NEXT