தமிழ் சினிமா

'காமன் மேன்' டு 'நான் மிருகமாய் மாற’ - பெயர் மாற்றப்பட்ட சசிகுமார் படம்

செய்திப்பிரிவு

காப்புரிமை பிரச்சினையில் சிக்கிய சசிகுமார் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

சசிகுமார் நடிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கி வரும் படம் நடிகர் 'காமன் மேன்'. இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்புக்கான காப்புரிமை தங்களிடம்தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் புகாரளித்தது.

இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் சார்பில் 2018ஆம் ஆண்டே ‘காமன் மேன்’ என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சேம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமை தொடர்பாக அனைத்து ஆதார ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இதையடுத்து 'காமன் மேன்' என்ற தலைப்பை மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 'நான் மிருகமாய் மாற’ என்று புதிய தலைப்பை வைத்துள்ளது படக்குழு. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT