விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் 'தேவி' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி, சோனு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தேவி'. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை விஜய் இயக்கி இருக்கிறார். பிரபுதேவா தயாரித்திருக்கும் இப்படத்தை ஆரோ சினிமாஸ் வெளியிட்டு இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியாக இருப்பதால் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இறுதிகட்ட பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து தணிக்கை விண்ணிப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியதைத் தொடர்ந்து, இப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
'தேவி' படப்பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் விஜய்.