தமிழ் சினிமா

ஆட்சிக்கு நல்லவர்கள் வரவேண்டும்: கமல்ஹாசன் விருப்பம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகமாக வேண்டும் என்று விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன், அவரது மகள் அக்‌ஷராஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது. நல்லவர்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தளவுக்கு வாக்கு சதவீதம் ஏறுகிறதோ அந்தளவுக்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படுகிறது என்று அர்த்தம்.

வாக்கு சதவீதம் அதிகமாக வேண்டும் என்பது என் விருப்பம். அனைவருக்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமை. என் கடமையை நான் செய்துவிட்டேன். அனைவரது கடமையையும் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உங்களுக்கு வாக்கில்லை என்று ஒரு சர்ச்சை எழுந்ததே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "அது நான் விளையாட்டாக சொன்னது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT