'விஜய்67' படத்தின் நடிகை சமந்தா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, காவலர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'விக்ரம்' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயுடன் இணைகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். 'விஜய் 67' என அழைக்கப்படும் இப்படம் கேங்க்ஸ்டர் படமாக உருவாக உள்ளது. இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த வருடம் திரைக்க வரும் இப்படத்தின் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நடிகை சமந்தா இந்தப் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
சமந்தாவை பொறுத்தவரை முன்னதாக விஜயுடன், 'தெறி', 'கத்தி', 'மெர்சல்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மீண்டும் விஜயுடன் இணையும் அவர் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
சமந்தா தெலுங்கில் 'சாகுந்தலம்', 'குஷி' மற்றும் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் 'யசோதா' படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.