தமிழ் சினிமா

வெற்றி மாறன் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா?

செய்திப்பிரிவு

வெற்றிமாறன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் 'விடுதலை' படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அசுரன்’ திரைப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் ’விடுதலை’. இதில், விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ’துணைவன்’ கதையை தழுவி இப்படம் உருவாக்கப்படுகிறது.

மலைவாழ் மக்களுக்கு காவல் துறையால் நேரும் இன்னல்கள் குறித்த கதைக்களமாக இந்தப் படம் உருவாவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள சூழலில், விஜய் சேதுபதி மகன் சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலைவாழ் மக்களைச் சேர்ந்த இளம் பழங்குடியின இளைஞனாக அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT