நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், தன்னை சந்தித்தவர்கள் மற்றும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
''எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளவும். கரோனா தொற்று நம்மை விட்டு இன்னும் செல்லவில்லை. அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
-