தமிழ் சினிமா

நடிகை பிரியாமணி - முஸ்தபா ராஜ் திருமண நிச்சயதார்த்தம்: பெங்களூருவில் நடந்தது

செய்திப்பிரிவு

நடிகை பிரியாமணி - தனியார் நிறுவன அதிபர் முஸ்தபா ராஜ் திருமண நிச்சயதார்த்தம் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்றது.

‘அது ஒரு கனாக்காலம்’, ‘பருத்தி வீரன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ உள் ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரியாமணி. தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது கன்னடத்தில் ‘டனா கயோனு’ என்ற படத்திலும் ‘சைலன்ட் ரேடியோ’ என்ற மலை யாள படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நடிகை பிரியாமணிக்கும், முஸ்தபா ராஜுக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது. அதுவே காலப்போக்கில் காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் இரு வீட்டார் சம்மத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இவர்களது திருமணம் நடைபெறும்.

நிச்சயதார்த்தம் குறித்து பிரியா மணி தனது ட்விட்டரில், ‘‘மிக நெருக்க மான உறவினர்கள், நண்பர்கள் முன்னி லையில் முஸ்தபா ராஜுக்கும், எனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT