தமிழ் சினிமா

புதிய அரசு விவசாயத்துக்கு முன்னுரிமை தரவேண்டும்: கார்த்தி வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசு விவசாயத்துக்கு நல்லது செய்தாக வேண்டும் என்று நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னையில் தனது தந்தை சிவகுமாருடன் கார்த்தி தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கார்த்தி "தயவு செய்து வீட்டில் இருக்கும் இளைஞர்கள் அனைவருக்கு வந்து வாக்களிக்க வேண்டும். அப்பா சொன்னது போல் மதுவிலக்கு எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது.

எனக்கு விவசாயம் மிகவும் முக்கியமாக படுகிறது. விவசாயம் பற்றிய கதை இருந்தால் நடிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

விவசாயம் ரொம்ப மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. ஊருக்கும் போகும் போது செழிப்பாக இருந்த விவசாயம் இப்போது இல்லை. ஆளே இல்லை. விவசாயத்திற்கு நிச்சயமாக வரும் அரசாங்கம் நல்லது பண்ணியே ஆகவேண்டும். நிறைய விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பெருமைப்படுத்தி அவர்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கி தர வேண்டும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT