சென்னை: நடிகர் விதார்த் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
கிரினேடிவ் குழுமத்தை சேர்ந்த கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை எஸ். ஆர்.சதீஷ்குமார் மேற்கொள்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்திற்காக ஜிப்ரான் இசையமைக்க, கலை இயக்கத்தை மோகன் கவனிக்கிறார்.
'டான்' பட புகழ் நாகூரான் ராமச்சந்திரன் படத் தொகுப்பு பணிகளை கையாள. சண்டை அமைப்பு பணிகளை தினேஷ் சுப்பராயன் கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற மூத்த கலைஞர் ‘பட்டணம்’ ரஷீத் இந்தப் படத்தில் சிறப்பு ஒப்பனைக்காக பிரத்யேகமாக பணியாற்றுகிறார்.
படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் வில்லன் நடிகர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், இதில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பட குழுவினருடன் நந்தகுமார் ஐஏஎஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என்.ராகவன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழில் தயாராகும் காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான சைக்கோ - த்ரில்லர் திரைப்படம் இது என்று படக்குழு தெரிவித்துள்ளது.