தமிழ் சினிமா

350 திரையரங்குகளில் தெலுங்கில் வெளியாகிறது மாயோன் 

செய்திப்பிரிவு

தமிழில் வெளியான மயோன் திரைப்படத்தை ஜூலை 7-ம் தேதி முதல் தெலுங்கிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் 'மாயோன்'. இந்தப்படத்த்தை தயாரித்து திரைக்கதையும் எழுதியிருக்கிறார் அருண்மொழி மாணிக்கம். படத்தில், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வகையில், வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்குவில் மிக பிரம்மாண்டமாக படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தை பார்த்த தெலுங்கு விநியோகிஸ்தர் இந்தப்படத்தை தெலுங்கில் 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT